dinamalar telegram
Advertisement

மர்ம சத்தத்தால் மக்கள் பீதி

Share
அரூர்: அரூர் மற்றும் மொரப்பூர் சுற்று வட்டாரத்தில், நேற்று மதியம், 12:58 மணிக்கு, திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக வீடுகளை விட்டு வெளியே வந்தனர். சிலர், பெரிய இடி போல சத்தம் கேட்டது என்றும், மேலும் சிலர், வானத்தில் டமார் என பெரிய சத்தம் கேட்டது. தொடர்ந்து, வீட்டின் ஜன்னல், கதவுகள் அதிர்ந்தன. விமானத்தின் அதிவேக ஓட்டத்தின் போது கூட, இப்படி சத்தம் கேட்கும் என தெரிவித்தனர். கடந்தாண்டு, அக்., 15, 21 ஆகிய நாட்களில், இதேபோன்று அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் மர்ம சத்தம் கேட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரிகளை கேட்டபோது, விசாரிப்பதாக தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement