dinamalar telegram
Advertisement

அரசு பள்ளியில் மின்விளக்குகள் பழுதால் மாணவர்கள் அவதி

Share
புதுச்சேரி-கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேனிலைப் பள்ளி மைதானத்தில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளதால் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் பொது மக்கள், மாணவர்கள் சிரமப் படுகின்றனர்.மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் கருணாநிதி அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியின் மைதானத்தில் பொதுமக்கள் காலை மாலை என இரு வேளையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன், மாணவ மாணவியர், விளையாட்டு பயிற்சி செய்து வருகிறார்கள்.பொது மக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மைதானத்திற்கு சாலை மற்றும் எல்.இ.டி., மின்விளக்கு வசதி, முன்னாள் எம்.எல்.ஏ., வாயிலாக செய்து தரப்பட்டது.இந்த மைதானத்தில் கடந்த மூன்று மாதங்களாக மின் விளக்குகள் எரியவில்லை. விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்துள்ளதால் விளையாட்டு பயிற்சிக்கு வரும் மாணவர்கள், நடைப்பயிற்சிக்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, பள்ளியில் பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement