dinamalar telegram
Advertisement

பிரஞ்சு கோன்சல் ஜெனரல் தமிழிசை சந்திப்பு

Share
புதுச்சேரி-புதுச்சேரி கவர்னர் தமிழிசையை, பிரஞ்சு கோன்சல் ஜெனரல் சந்தித்து பேசினார்.சென்னை மற்றும் புதுச்சேரிக்கான பிரஞ்சு கோன்சல் ஜெனரல் லிசே தல்போ பர்ரே, நேற்று புதுச்சேரி கவர்னர் தமிழிசையை, கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார்.அப்போது, புதுச்சேரிக்கும் பிரான்சு நாட்டிற்கும் இடையிலான பண்பாட்டு பாரம் பரிய உறவுகள், கலாசார பரிவர்த்தனைக்கான வாய்ப்புகள், புதுச்சேரியில் பிரஞ்சு கல்வியை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றிணைந்து செயல்படுவது, புதுச்சேரி கடற்கரை சுற்றுலா வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து செயல்படுவது, புதுப்பிக்கவல்ல எரிசக்தி, சூரிய எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் மேலாண்மை துறை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் குறித்து கலந்துரையாடினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement