dinamalar telegram
Advertisement

குளிர்பானத்தில் விஷம்? தாய், மகள் இறப்பு!

Share
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன், 37; மனைவி கற்பகம், 34; மகன் சண்முகபாண்டி, 8; மகள் தர்ஷினி, 7. நேற்று முன்தினம் இரவில் தாயும், மகளும் ஓட்டலில் அசைவ உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின், குளிர்பானம் அருந்தியுள்ளனர்.சற்று நேரத்தில் வாந்தி, மயக்கத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.


உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அவர்கள் உணவு வாங்கிய ஓட்டல், குளிர்பானம் வாங்கிய கடையில் ஆய்வு செய்தனர். அவர்கள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement