dinamalar telegram
Advertisement

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி

Share

புதுக்கோட்டை : பொன்னமராவதி அருகே தேனிமலை முருகன் கோவிலில் பட்டதாரி இளைஞர், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மலையிலிருந்து குதிப்பதாக மிரட்டல் விடுத்தார்.



புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனிமலை அருகே சுப்புராயபட்டியில் வசித்து வரும் விவசாயி பழனிச்சாமி மகன் சண்முகம், 22. இவர் மேலைச்சிவபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் எம்.காம்., படித்து வருகிறார். இவர் நேற்று தேனிமலை முருகன் கோவில் மலையிலிருந்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும், முற்றிலும் ஜாதியை ஒழிக்க வேண்டும்.தைல மரங்கள், கருவேலம் மரங்களை அழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனிமலை முருகன் கோவில் மலையிலிருந்து குதிப்பேன் என கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மலையிலிருந்து குதிப்பேன் என கூறிய இளைஞரிடம், 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை மீட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement