dinamalar telegram
Advertisement

தி.மு.க.,எம்.பி.,மகனை எதிர்த்த பெண் வேட்பாளர் மீது தாக்குதல்

Share
திருநெல்வேலி : நெல்லை தி.மு.க.,எம்.பி.,ஞானதிரவியம் மகனுக்கு எதிராக போட்டியிட்ட அ.தி.மு.க.,பெண் வேட்பாளரை போலீசார் கையால் தாக்கி வெளியேற்றினர்.


@@திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் 9வது வார்டில் நெல்லை தி.மு.க.,எம்.பி.,மகன் சேவியர் ராஜா போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க.,வேட்பாளர் ராதிகா போட்டியிட்டார். நேற்று வடக்கன்குளம் ராஜாஸ் கல்லுாரியில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டுச்சீட்டுகளில் முத்திரைகள் பெரியதும் சிறியதுமாக இருக்கிறது. ஓட்டு சீட்டுகளை தி.மு.க.,வினர் மாற்றிவிட்டனர் என கூறி அ.தி.மு.க.,வேட்பாளர் ராதிகா தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் எம்.பி.,க்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார்.

இதனால் பெண்போலீசார் அவரை அங்கிருந்து தள்ளி வெளியேற்றினர். அ.தி.மு.க.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், ராதிகாவை கையால் கழுத்தில் தாக்கி வெளியேற்றினார். ஓட்டு எண்ணிக்கைமுடிவில் சேவியர்ராஜா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement