dinamalar telegram
Advertisement

நெல்லையில் தி.மு.க., வெற்றி

Share
திருநெல்வேலி,:நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை தி.மு.க.,கைப்பற்றியது.

ஒன்றியங்களில் அ.தி.மு.க., சுயேச்சைகள் ஓரளவு இடங்களை பிடித்தனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 122 கவுன்சிலர், 12 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடந்தது. நேற்று மாலை வரை அறிவிக்கப்பட்ட

48 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் முடிவுகளில் 31 இடங்களை தி.மு.க.,கைப்பற்றியது. காங்.,3 இடங்கள், மா.கம்யூ, ஒரு இடத்தை பிடித்தன. அ.தி.மு.க., 2, அ.ம.மு.க., 2, சுயேச்சைகள் 9 இடங்களில் வென்றனர். பெரும்பான்மையாக தி.மு.க.,வினரே வெற்றிபெற்றனர்.தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 144 கவுன்சிலர்கள், 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இரண்டிலும் பெரும்பான்மையாக தி.மு.க.,வினர் கைப்பற்றினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement