dinamalar telegram
Advertisement

தந்தை மர்மச் சாவு

Share
திருநெல்வேலி:தந்தை இறப்பு குறித்து புகார் கொடுத்த மகன் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியை சேர்ந்தவர் அய்யாத்துரை என்ற பீர் 53. மனைவி வேலம்மாள் 42. மகன் கோதர் 22. அய்யாத்துரை மீன் வியாபாரி.ஸ்ரீவைகுண்டம், கால்வாயை சேர்ந்த சிவன் 40, அய்யாத்துரை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார் .வேலம்மாளை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு கன்னியாகுமரியில் தலைமறைவாகினர்

இதனால் அய்யாத்துரை, கோதர் சிவனுடன் தகராறில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் அய்யாத்துரை, அங்குள்ள கல்வெட்டான்குழியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரை கொலை செய்து கல்வெட்டான்குழியில் வீசியது சிவன் தான் என போலீசில் கோதர் தெரிவித்தார்.

நள்ளிரவில் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த கோதரையும் வெட்டிக்கொலை செய்தனர். தலைமறைவான சிவன், குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement