dinamalar telegram
Advertisement

குமரியில் தொடரும் மழை: 12 கிராமங்கள் துண்டிப்பு

Share
நாகர்கோவில்:குமரி மாவட்ட மலையோரங்களில் மழை தொடர்வதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் மூழ்கி, 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

குமரி மாவட்டத்தில் மூன்று நாட்களாக, தொடர் மழை பெய்வதால் ரோடுகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.மொத்தம் 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையில், நேற்று காலை 44.44 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வந்துக் கொண்டிருந்த 3,783 கன அடி தண்ணீரும் உபரி நீராக வெளியேற்றப்பட்டது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம், நேற்று காலை 73.86 அடியாக இருந்தது.

கோதையாறு நீர்மின் நிலைய அணைக்கு வரும் தண்ணீர், முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குற்றியாறு - மோதிர மலை ரோட்டில், தரை பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால், 12 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

வால்பாறை கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை, கெஜமுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. வால்பாறையில் இருந்து அக்காமலை செல்லும் ரோட்டில் நள்ளிரவில் மரம் விழுந்து, ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு, அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.கன மழை பெய்வதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணியர் செல்ல கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

40 கிராமங்கள் துண்டிப்பு

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே, வெள்ளாற்றின் குறுக்கே தற்காலிக செம்மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை அரியலுார் மற்றும் கடலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தினர்.

சில தினங்களாக அரியலுார் மாவட்ட கிராமங்களில் தொடர் மழை பெய்கிறது. நேற்று பகல் 12:00 மணியளவில் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இந்த தற்காலிக செம்மண் சாலை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், கடலுார் - அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த 40 கிராம மக்கள், முருகன்குடி வெள்ளாறு மேம்பாலம் வழியாக 10 கி.மீ., துாரமும், பெ.பொன்னேரி தரைப்பாலம் வழியாக, 15 கி.மீ., துாரம் சுற்றி பெண்ணாடம், திட்டக்குடி, செந்துறை, அரியலுார் பகுதிகளுக்கு செல்கின்றனர். இதேபோல், செம்பேரி - தெத்தேரி இடையே வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக செம்மண் சாலையும் துண்டிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement