dinamalar telegram
Advertisement

குமரி மாவட்டத்தில் மழையால் 12 கிராமங்கள் துண்டிப்பு

Share
நாகர்கோவில்:குமரி மாவட்ட மலையோரங்களில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. தரைப்பாலம் மூழ்கியதால் 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களாக மழை பெய்ததால் ரோடுகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. 48.00 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணையில் நேற்று காலை 44.44 அடியாக இருந்தது. 77.00 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று காலை 73.86 அடியாக இருந்தது.

கோதையாறு நீர்மின்நிலைய அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குற்றியாறு - மோதிர மலை ரோட்டில் தரை பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. 12 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் மிக அதிக அளவில் வருவதால் பூங்கா உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கியுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement