dinamalar telegram
Advertisement

தந்தை மர்ம சாவு: மகன் கொலை

Share
திருநெல்வேலி,:தந்தை மர்ம சாவு குறித்து புகார் கொடுத்த மகன் கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியைச் சேர்ந்தவர் அய்யாதுரை, 53; மீன் வியாபாரி. மதம் மாறி பீர் என பெயர் மாற்றிக் கொண்டார். இவரது மனைவி வேலம்மாள், 42; மகன் கோதர், 22. ஸ்ரீவைகுண்டம், கால்வாயைச் சேர்ந்த சிவன், 40, பீர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார்.

இதில் கள்ளக்காதல் ஏற்பட்டு, வேலம்மாளை இரண்டாவது திருமணம் செய்து கன்னியாகுமரியில் குடியேறினார்.இதனால் பீர், கோதர் இருவரும் சிவனுடன் தகராறில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பீர், அங்குள்ள கல்வெட்டான்குழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக, சிவன் மீது போலீசில் கோதர் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், நள்ளிரவில் வீட்டில் துாங்கிய கோதரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தலைமறைவான சிவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement