dinamalar telegram
Advertisement

குடிபோதையில் வாலிபர் கொலை உடல் தோண்டியெடுத்து விசாரணை

Share
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே குடிபோதையில் கொன்று புதைத்த வாலிபரின் உடலை தோண்டியெடுத்து விசாரணை நடந்தது.


@@தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், சிவகாமிபுரத்தை சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளி முருகேசன் மகன் ஜெகதீஷ் 24. அக்.,5ல் காணாமல் போனார். சம்பவத்தன்று துாத்துக்குடியை சேர்ந்த நண்பர்களுடன் காரில் சென்றதை சிலர் பார்த்துள்ளனர். சம்பவத்தன்று ஜெகதீஷ் நண்பர்களுடன் மதுஅருந்தினார். அப்போது ஏற்பட்ட தகராறில் நடந்த தாக்குதலில் இறந்துவிட்டார்.

உடலை திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் காட்டுப்பகுதியில் புதைத்தனர். நேற்று திருநெல்வேலி போலீசார், வருவாய்த்துறையினர் முன்னிலையில் ஜெகதீஷ் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடந்தது. டக்கரம்மாள்புரம் வக்கீல் ஜோயல் உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement