dinamalar telegram
Advertisement

காவிரி மாசற்ற ஆறாக மாறும்: அமைச்சர் மெய்யநாதன் உறுதி

Share
புதுக்கோட்டை: ''காவிரியில் எவ்விதமான கழிவும் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி: பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் அகற்றுவது தான், தமிழக அரசின் முக்கிய நோக்கம். அதற்கு மாற்றாக நூலால் நெய்யப்பட்ட பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கப்பட்டது. அணுக்கழிவுகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. ஆனால், ஏழு ஆண்டுகளாக ஒப்பந்தம் நடைமுறைக்கு வராமல் அணுக்கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இது பற்றி, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காவிரி மாசு தொடர்பாக ஆய்வு செய்ய, 6ஆம் தேதி ஆறு குழுக்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்து விட்டது. அவர்கள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள், எந்த சாயக்கழிவும், மருத்துவக் கழிவுகளும் காவிரியில் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மாசற்ற ஆறாக மாறும். இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement