dinamalar telegram
Advertisement

ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம்; சட்டம் நிறைவேற்ற ஐகோர்ட் உத்தரவு

Share
அலகாபாத்-'இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கடவுள்களான ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும்' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.மனு தாக்கல்உத்தர பிரதேசத்தின் சத்ரசைச் சேர்ந்த ஆகாஷ் ஜாதவ் என்பவர், சமூக வலைதளத்தில் ஹிந்துக் கடவுள்களை அவமதித்து பதிவு வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவர், ஜாமின் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:ஹிந்துக் கடவுள்களான ராமர், கிருஷ்ணர், காப்பியங்களான ராமாயணம், பகவத் கீதை, அவற்றை எழுதிய மகரிஷி வால்மீகி, மகரிஷி வேத வியாசர் ஆகியோர் போற்றப்பட வேண்டும். நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அவர்களுக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் பார்லி.,யில் சட்டம் இயற்ற வேண்டும்.இந்திய கலாசாரத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை பள்ளிகளில் பாடங்களாக சேர்க்க வேண்டும்.

விசாரணைஅயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், 'ராமர் நம் கலாசாரத்தின் ஆன்மா; ராமர் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது' என கூறியுள்ளது.ஒருவர் நாத்திகராக இருக்க அரசியல் சாசனம் அனுமதி அளிக்கிறது. அதற்காக மதங்களை இழிவுபடுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை. தான் வாழும் நாட்டின் கலாசாரம், கடவுள்களை மதிக்க வேண்டும். இதுபோன்று அவதுாறாக கருத்து தெரிவிக்கக் கூடாது.

மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவிப்போருக்கு எதிராக பல நாடுகளில் கடுமையான தண்டனை வழங்கும் சட்டங்கள் உள்ளன.இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளவர், 10 மாதங்களாக சிறையில் உள்ளார். ஆனால், வழக்கின் விசாரணை இதுவரை துவங்கவில்லை. அதனால், அவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (72)

 • Vittalanand -

  ஹிந்து மதம் அடிப்படையில் 3 பிரிவுகள் அத்வை தம். துவைதம்,விசிஷ்டாதுவைத்தம். முதல் பிடிவு ஈஸ்வரனை ய இரண்டாம் பிரிவு கிரிஷ்ணனையும் மூன்றாம் பிரிவு விஷ்ணுவையும் வணங்குவார்கள். இரண்டாம் பிரிவும் மூன்றாம் பிரிவும் ஒன்றாகவும் முதக் பிரிவு உற்றிலும் வேறாகவும் அடிப்படஒயில் உள்ளன.கி சிவனுக்கு லிங்க வழிபாடு தான் பிரதானம்.லிங்கத்திலேயே ஆக்குகுதல் காத்தல் அழித்த ல் அனைத்தும் அடங்கிவிடுகின்றன. லிங்கம் உறுவமில்லாதது. பிற விஷ்ணு வழி பாட்டில் உருவ வழுப்பாடு உண்டு. சிதம்பரம் விதி விலக்கு. ராமரும் கிருஷ்ணரும் வாழ்ந்து காட்டியவர்கள். சகலமும் கைலாய மலையில் ஈசனிடம் அடங்கி விடுகிறது. ராமரே ஈஸ்வரனை வணங்கி உள்ளார்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அந்த நீதிபதி வாழ்க. இங்கே மதத்தை தாக்கும் கறுப்பர்களை (மன கருப்பு) உள்ளே போடவும்.

 • rajan -

  புகைப் படங்கள் அருமை. தனியாக வெளியிங்கள் FRAME போடுவது மாதிரி.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  இங்கு இந்தோனேஷியாவின் மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முஸ்லீம். ஆனால் இந்து பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள், விசாரித்தால் நாங்கள் மதம் மாறினோமே தவிர எண்கள் மூதாதையரை மாற்றிக்கொள்ள வில்லை, என்பது அவர்களின் பதில். இந்த உண்மையை புரிந்து கொண்டால் இந்தியாவில் மதமாற்றங்கள் நடக்காது. ஐந்தே தீர்ப்பு மதிப்பு மிக்க தீர்ப்பு, மதிக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பை கொடுத்த கணம் நீதிபதி அவர்களுக்கு அநந்தகோடி நமஸ்காரங்கள்.

 • Naresh Giridhar - Chennai,இந்தியா

  எங்க ஊர் அய்யனாருக்கும் , பக்கத்துக்கு ஊரு மாரி அம்மனுக்கும் தேசிய கெளரவம் அளிக்க வேண்டும்.

Advertisement