dinamalar telegram
Advertisement

தடுப்பூசி போடாத பயணிகள்; பஸ்சிலிருந்து இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு

Share
வேலுார்: வேலுார் பஸ் ஸ்டாண்டில் தடுப்பூசி போடாத பயணிகளை பஸ்சில் இருந்து அதிகாரிகளால் இறக்கி விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வேலுார் மண்டல போக்குவரத்துக்கழகம் சார்பில், வேலுாரில் இருந்து அரக்கோணம், சென்னை, திருப்பத்துார், குடியாத்தம், ஒசூர், பெங்களூரு, திருவண்ணாமலை, கடலுார், சிதம்பரம், திருச்சி, விருத்தாச்சலம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலம் சித்துார், திருப்பதி, காளஸ்திரி ஆகிய பகுதிகளுக்கு 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பஸ்களில் முகக்கவசம் அணிந்தவர்களை மட்டும் பயணம் செய்த அறிவுறுத்தினர். தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? என ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, வேலுார் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் தலைமையில் வேலுார் பஸ் ஸ்டாண்டில் இன்று ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த பஸ்களில் ஏறி பயணிகளிடம் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளீர்களா? என கேட்டு அதற்கான சான்றுகளையும் சரி பார்த்தனர். அதில், தடுப்பூசி போடாத பயணிகள் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கி அங்குள்ள சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுத்தினர்.
‛‛கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 120 பயணிகள் பஸ்சில் இருந்து இன்று இறக்கி விடப்பட்டனர். இதில், பாதி பேர் அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்,'' என வேலுார் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

 • Rajesh - Chennai,இந்தியா

  தடுப்பூசி போட்டல் நல்லது என சொல்லும் நண்பர்களே, எந்த ஆதாரத்தை வைத்து நல்லது என்று சொல்கிறீர்கள், காலம் காலமாக நாம் பிபற்றி வரும் சித்த மருத்துவம் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா, இப்படியே போனால், இவன் எது சொன்னாலும் தலையை ஆடிகிட்டு போக வேண்டியது தான், திரும்பி பார்த்தாள் எங்குமே திடீர் மரணங்கள், எதற்கு விடை கிடைக்கும் முன்னே நமும் போய் செயர்ந்துடுவோம்

 • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

  "தடுப்பூசி போடாதவர்கள் பஸ்சில் ஏறுவதற்கு இந்தத் தேதியிலிருந்து தடை விதிக்கப்படுகிறது" என்று 'பக்காவாக' பலநாட்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக ஓர் அறிக்கை வெளியிட்டுவிட்டு அப்புறம் தடுப்பூசி போடாத பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விட்டால் ஒரு நியாயம் இருக்கும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

 • Arul Narayanan - Hyderabad,இந்தியா

  முன்னறிவிப்பு இன்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை அராஜகம் தான். ஸ்மார்ட் போன் இல்லாத மக்கள் ஆதாரத்தை கையிலா வைத்திருப்பார்கள்? இப்போது ஊசி போட்டவர்க்கெல்லாம் ஆதார் எண் இல்லாமல் எப்படி போட்டார்கள்?

 • M Ramachandran - Chennai,இந்தியா

  திடீர் என்று அறிவுப்பு செய்யாமல் இப்படி செய்வது இவர்களின் வாடிக்கைய.இதை விடியல் குமபல் எதிர்க்கட்சியாக யிருந்தபோது எதீர்த்து எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் செய்தன. இப்போர் அதையே செய்யும் கும்பலாய் ஆதரிக்கும் அடிமையை காலை என்ன செய்வது.

 • mukambikeswaran sukumar - bangalore ,இந்தியா

  தடுப்பூசி நன்மை பயக்கும் என்பது பற்றி இதுவரை அறிவியல் பூர்வமான முடிவான கருத்துக்கள் அதிகார பூர்வமாக வரவில்லை. தடுப்பூசி பற்றி இருவிதமான சர்ச்சைகளுக்கு எந்த அறிவியலாரும் முற்றுப் புள்ளி வைக்கவில்லை. தடுப்பூசிக்காக மக்களை பலிகடா ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்? முதலில் கோவிட் வந்த போது அந்த தெருவையே தனிமைப் படுத்தினார்கள். அப்புறம் வீட்டை தனிமைப் படுத்தினார்கள்.. பிறகு சுயமாக தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள். இப்பொழுது மக்கள் தாங்களாகவே வந்து சுகாதார நிிவையத்தில் சிகிச்சை பெற உத்தரவு. இந்த முரண்பாட்டுக்கு யார் பதில் சொல்வது? நாமெல்லாரும் ஆட்டு மநதைகளாத இருக்கிறோம்.

Advertisement