dinamalar telegram
Advertisement

பல்கலை மாஜி அதிகாரியின் சொத்துக்கள் மதிப்பு ஆய்வு

Share
வேலுார் ,: லஞ்ச புகாரில் சிக்கிய திருவள்ளுவர் பல்கலை முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்அசோகன் வீட்டில் கைப்பற்றிய சொத்து பத்திரங்களின் மதிப்பை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மேல எருக்காட்டூரைச் சேர்ந்தவர் அசோகன். அ.தி.மு.க., ஆட்சியில், வேலுார் திருவள்ளுவர் பல்கலையில் 2013 - 2017 வரை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பதவி வகித்தார்.அப்போது, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்படி, கடந்த 28ம் தேதி, ஓய்வு பெறும் நாளில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள பங்களாவில் இரண்டாவது மனைவி ரேணுகாதேவியுடன் வசித்து வந்தார்.

இருவரும் வருமானத்திற்கு அதிகமாக 53 லட்சத்து 50 ஆயிரத்து 818 ரூபாய், அதாவது 63 சதவீதம் சொத்து சேர்த்ததாக 4ம் தேதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.நேற்று முன்தினம் இவரது பங்களாவில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
அசோகன் மேலஎருக்காட்டூரில், 2 கோடி ரூபாயில் சொகுசு பங்களா, பருத்தியூர், கண்கொடுத்த வனிதம், தஞ்சாவூரில் விவசாய நிலங்களை வாங்கி குவித்துள்ளார். முதல் மனைவி வசந்தகுமாரிக்கு, கரூரில் 5 கோடி ரூபாயில் சொகுசு பங்களா கட்டி கொடுத்து உள்ளார்.
பதவியில் இருக்கும் போது தங்க நகைகள், வெள்ளி கட்டிகளாக வாங்கியுள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின், தற்காலிக முதல்வராக பன்னீர்செல்வம் பதவி ஏற்றபோது, கூவத்துார் பங்களாவில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை தங்க வைத்து, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.அசோகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து பத்திரங்களை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது. பினாமி முறையில் உறவினர்கள், நண்பர்கள் பெயரில் சொத்துக்கள் உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இரண்டு திருமணம் ஏன்?


அசோகன், புதுக்கோட்டை மாவட்ட அரசு கலைக் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றிய போது, அங்கு டியூஷன் மையம் நடத்தி வந்த வசந்தகுமாரியை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர், திருவாரூர் திரு.வி.க., அரசு கல்லுாரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அதே கல்லுாரியில் அசோகன் பணியாற்றிய போது, அவரிடம் படித்த மாணவி ரேணுகாதேவியுடன் தொடர்பு ஏற்பட்டதில், அவர் கர்ப்பமானார்.
முதல் மனைவி எதிர்ப்பால் அவரை திருமணம் செய்ய மறுத்தார். ஆனால் பெற்றோர், மாணவர்கள் போராட்டத்தால், ரேணுகாதேவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

 • venkatan - Puducherry,இந்தியா

  அரசியல் மன்னர்களின் ஏகபோக லஞ்ச லாவண்ய உல்லாச வாழ்க்கை.எந்த க் கழகமானாலும் அதில் சுருட்டல் சுரண்டல் கொள்ளை ...என ஜனநாயகம் அனுமதித்து விடுகிறது.

 • B N VISWANATHAN - chennai,இந்தியா

  உள்ளபடியே இவருக்கு நேரடியாக ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டியது தான்

 • GANESUN - Delhi,இந்தியா

  லஞ்சம் குடுத்து காரியம் சாதித்துக் கொண்டவர்களும் தண்டனை தர வேண்டும்.

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  மாணவியுடன் தகாத உறவு வைத்திருந்ததுக்கு, இவரை டிஸ்மிஸ் தானே செய்திருக்கணும்? எப்படி பதவி உயர்வெல்லாம் குடுத்தாங்க? ஊழல் பண்ண விட்டாங்க? நல்ல ஆட்சியாளர்கள்

 • sami srinivasaraghavan - Chennai,இந்தியா

  Romba nallavar. Moththam ethani kalyanam. Sariyaga visarikkavum. Ivar thaguthikku, irandu poddhadhu.

Advertisement