dinamalar telegram
Advertisement

திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி கடத்திய 5 பேர் கைது

Share
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே, திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை கடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே சுங்கான்கடையில் இரணியல் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஒரு காரில் பைக்குகுள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த பொருளை கைப்பற்றினர்.விசாரணையில், அது, 'ஆம்பர் கிரீஸ்' எனப்படும் திமிங்கலத்தின் உமிழ் நீர் கட்டி என்று தெரியவந்தது.இதை கடத்தி வந்த ஐந்து ஆண்களை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களை வனத் துறையினர் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடத்தல் ஏன்?



திமிங்கலத்தின் உமிழ் நீரான ஆம்பர் கிரீஸ், உயர்ரக வாசனை திரவியங்கள் மற்றும் விலை உயர்ந்த மதுபானங்களில், வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது. சில மருந்துகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.சர்வதேச சந்தையில் 1 கிலோ எடையுள்ள ஆம்பர் கிரீஸ், 1 முதல் 1.50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், 'கடல் தங்கம்' எனவும் அழைக்கப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement