dinamalar telegram
Advertisement

கார் விபத்தில் தவ்ஹீத் பிரமுகர் பலி

Share
திருச்சி:மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்தவர் காமில் பாட்ஷா, 51. இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மதுரை மாவட்ட துணை செயலாளராக இருந்தார்.

இதே அமைப்பைச் சேர்ந்த மதுரை மாவட்ட நிர்வாகிகள், ஜாகீர் உசேன், 29, சையத் அம்ஜத் கான், 37, சுல்தான், 29, உள்ளிட்ட, 7 பேர், நேற்று காலை காரில், லெப்பைகுடிகாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு புறப்பட்டனர். காரை, முகம்மது உமர், 34, என்பவர் ஓட்டி உள்ளார். நேற்று காலை, 8 மணியளவில், கார் துவரங்குறிச்சி அருகே செவந்தான்பட்டி விலக்கு என்ற இடத்தில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் காமில் பாட்ஷா இறந்தார். மற்ற ஆறு பேரும் சிகிக்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement