dinamalar telegram
Advertisement

வாக்காளர்கள் வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் தயார்

Share
வேலுார்: 2 ம் கட்ட தேர்தலுக்கு, வாக்காளர்கள் வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வேலுார் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை 9 ம் தேதி நடக்கிறது. வேலுார் மாவட்டத்தில், காட்பாடி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.வி. குப்பம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 2 ம் கட்ட தேர்தல் நடக்கிறது. ஓட்டு போட வருபவர்களுக்கு திடிர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் 22 தயார் நிலையில் உள்ளன. இது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் கூறியதாவது:எப்போதும் 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். தேர்தலுக்காக மட்டும் 22 ஆம்புலன்ஸ் தயார் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ்கள் அந்தந்த ஓட்டுச் சாவடி மையங்களின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement