dinamalar telegram
Advertisement

திருச்சியில் 150 அடி உயரத்தில் தேவருக்கு சிலை: தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சி அறிவிப்பு

Share
திருச்சி: 'திருச்சியில், 150 அடி உயரத்தில், முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைக்கப்படும்' என்று தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.


தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் திருமாறன் மற்றும் இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் ஆகியோர், நேற்று, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின், ரங்கா ரங்கா கோபுர முன், அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து சமூக மக்களுக்காக போராடியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். திருச்சியில், 150 அடி உயரத்தில், அவருக்கு சிலை அமைக்க வேண்டும். அதற்காக இடத்தை தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்ந்த ஆன்மிக பூமியான தமிழகம், சமீப காலமாக, நாத்திக பூமி என்ற தோற்றத்தில் மாறி வருகிறது. திருச்சியில் அனைத்து சமூக மக்களுக்காகவும் போராடிய ராமானுஜர் போன்ற பலர் வாழ்ந்துள்ளனர். எனவே, சுதந்திரத்துக்காக போராடிய முத்து ராமலிங்க தேவருக்கு விரைவில் சிலை அமைக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement