dinamalar telegram
Advertisement

பெண் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

Share
திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள சின்னவேலக்கா நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் தேஜாஸ்ரீ, 7, கடந்த, 2017ம் ஆண்டு நடந்த பள்ளி வாகன விபத்தில் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து அப்போது முசிறி இன்ஸ்பெக்டராக இருந்த ஜெயசித்ரா, 53, வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இந்த வழக்கு விசாரணை திருச்சி முதலாவது சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில், இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் வரவில்லை.இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயசித்ராவுக்கு சாட்சி பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி வேதியப்பன் உத்தரவிட்டார். ஜெயசித்ரா தற்போது பெரம்பலுார் அனைத்து மகளிர் போலீசில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement