dinamalar telegram
Advertisement

துப்பாக்கி தொழிற்சாலை பரிசோதனையில் குண்டு வெடித்து 2 ஊழியர்கள் படுகாயம்

Share
திருச்சி : திருச்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலையில், துப்பாக்கியை சோதனை செய்து பார்த்தபோது குண்டு வெடித்ததில், இரண்டு ஊழியர்கள் காயமடைந்தனர்.


@@திருச்சி, திருவெறும்பூர் அருகே, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள படைக்கல தொழிற்சாலையில், துப்பாக்கி போன்ற தொழிற் பாதுகாப்பு படைகலன்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் நவீன ரக துப்பாக்கிகள் ராணுவம், சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸ் போன்ற பாதுகாப்பு படை பிரிவினருக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஆன்டி மெட்டீரியல் ரைபிள் (ஏ.எம்.ஆர்.,) ரக துப்பாக்கியை, தொழிற்சாலை பணியாளர்கள் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது சேம்பரில் இருந்த குண்டு வெடித்துச் சிதறியதில், தொழிற்சாலை வளாக குடியிருப்பைச் சேர்ந்த, ஊழியர்கள் பிரகாஷ்,42, வடக்கு காட்டூரைச் சேர்ந்த அழகேசன்,57, ஆகிய இருவரும் கையில் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் இருவரும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாவல்பட்டு போலீசார், தொழிற்சாலையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement