dinamalar telegram
Advertisement

நீதிமன்ற வளாகத்தில் காதல் ஜோடிக்கு திருமணம்

Share
புதுக்கோட்டை : இளம்பெண்ணை கர்ப்பமாக்கியவருக்கு நீதிமன்ற வளாகத்தில் திருமணம் நடந்தது.


@@புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடக்குபட்டியைச் சேர்ந்தவர் ராம்கி, 30; அதே பகுதியில் வசிக்கும் உறவினர் கஸ்துாரி, 23, என்பவரை காதலித்துள்ளார். இருவரும் நெருங்கிப் பழகினர். இதில் கர்ப்பமான கஸ்துாரியை, ராம்கி திருமணம் செய்ய மறுத்துள்ளார்.கஸ்துாரி புகாரின்படி, பலாத்கார வழக்கில் ராம்கியை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.

நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், இரு தரப்பு வக்கீல்களும் சமரச பேச்சு நடத்தி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அறிவுறுத்தினார்.இதையடுத்து, ராம்கி, கஸ்துாரி சம்மதத்துடன், நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில், நேற்று இருவருக்கும் திருமணம் நடந்தது. துப்பாக்கி ஏந்திய போலீஸ், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், இரு தரப்பு உறவினர்கள் சாட்சியாக பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement