dinamalar telegram
Advertisement

புதுக்கோட்டையில் கன மழை

Share
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முழுதும் மழை பெய்ததால், கம்பன் நகர், பெரியார் நகர் பகுதிகளில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். 'புதுக்கோட்டை நகரில் மழைநீர் வடிகாலை முறையாக தூர்வாராததே இதற்கு காரணம்' என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது. வாத்தலை, மணப்பாறை, முசிறி, திருச்சி நகரம், துறையூர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. மணப்பாறையில் மழைநீர் வடிகால் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால், 20க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement