dinamalar telegram
Advertisement

தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை

Share
புதுக்கோட்டை: சொத்துப் பிரச்னையில், தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகனுக்கு துாக்கு தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன் விடுதி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ், 45; மனைவி திலகராணி, 45. தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். 2007ம் ஆண்டு குடும்பத் தகராறில், கணவர் தங்கராஜ் மீது திலகராணி தலையில் கல்லை துாக்கி போட்டு கொலை செய்ததாக, கறம்பக்குடி போலீசார் திலகராணியை கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்படாததால், சில மாதங்களில் திலகராணி விடுதலை செய்யப்பட்டார்.

திலகராணி, மூத்த மகன் ஆனந்த், 25, இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. அவ்வப்போது தகராறு நடந்துள்ளது. 2018 மார்ச் 18ல் அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில், தாய் திலகராணியை ஆனந்த் அரிவாளால் வெட்டி கொலை செய்து, தலையை துண்டித்து கையில் எடுத்துச் சென்று வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்தார்.

மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆனந்தை கைது செய்தனர். வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து, நேற்று நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். தீர்ப்பில் ஆனந்திற்கு, துாக்கு தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement