dinamalar telegram
Advertisement

ரூ.3 லட்சத்திற்கு குழந்தை வாங்கிய தம்பதி கைது

Share
துாத்துக்குடி:துாத்துக்குடியில் ஒன்பது மாத ஆண் குழந்தையை, 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய தம்பதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28; துாத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெபமலர், 28. இவர்கள் திருமணம் 2019ல் நடந்தது. ஒன்பது மாத ஆண் குழந்தை உள்ளது. இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்தனர்.ஜெபமலருக்கு இரண்டாம் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.


குழந்தை இடையூறாக இருப்பதால், நாகர்கோவில் தம்பதி செல்வமணி, 52 - ஸ்ரீதேவியிடம்,
3 லட்சம் ரூபாய்க்கு விற்றனர்.மணிகண்டன், சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் நேற்று செல்வமணி, ஸ்ரீதேவியை கைது செய்து, குழந்தையை மீட்டனர்.புரோக்கராக செயல்பட்ட ராஜபாளையம், ரெட்டியார்பட்டி கார்த்திகேயனையும் கைது செய்தனர். குழந்தையை விற்ற ஜெபமலர் உள்ளிட்ட குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement