dinamalar telegram
Advertisement

போலீஸ்காரர் மனைவி வெட்டிக்கொலை

Share

துாத்துக்குடி : திருச்செந்தூர் அருகே போலீஸ்காரரின் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தனிப்பிரிவு போலீஸ்காரராக இருந்த செல்வமுருகன் கடந்த ஆண்டு செப்.,30ல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி அருணா, 38, உடன்குடி பெரியவன்தட்டு பகுதியில் வசித்து வந்தார்.நேற்று மாலை 4:00 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த போது மர்மநபரால் வெட்டிக்கொலைசெய்யப்பட்டார்.உடன்குடி போலீசார் விசாரித்தனர். கள்ளக்காதல் பிரச்னையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement