கவுரவ விரிவுரையாளர்கள் பிரச்னை முதல்வர் தீர்வுகாண வலியுறுத்தல்
@@அச்சங்க மாநில தலைவர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்துள்ளதாவது:
விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி விரிவுரையாளர் அரியலுாரை சேர்ந்த முருகானந்தம்,49, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ செலவிற்கு கூட வசதியில்லாமல் மரணத்தை தழுவியுள்ளார். 15 ஆண்டுகளாக பணியில் இருந்தும் அவரால் வீடு வாடகை கூட செலுத்த முடியவில்லை. யு.ஜி.சி., கோரும் அனைத்து தகுதிகளும் உள்ள கவுரவவிரிவுரையாளரின் நிலை தமிழகத்தில் இவ்வாறு தான் உள்ளது.
உறுப்பு கல்லுாரிகளாக இருந்து அரசுக் கல்லுாரிகளாக மாற்றப்பட்ட பல கல்லுாரிகளில் குறைந்தபட்ச சம்பளமான ரூ.20 ஆயிரம் சம்பளம் நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை. ஆனால் பல மாநிலங்களில் யு.ஜி.சி., நிர்ணயித்த மாத சம்பளம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டும் சம்பளம் வழங்கப்படுகிறது.
பல கல்லுாரிகளில் 5 மாதங்கள் சம்பளம் நிலுவையில் உள்ளது. அவர்களின் எதிர்காலவாழ்வாதாரம் கருதி பணி அனுபவம், கல்வித் தகுதி அடிப்படையில் நிரந்தர உதவி பேராசிரியராக நியமனம் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!