dinamalar telegram
Advertisement

ரூ.1.62 லட்சம் மோசடி தி.மு.க., செயலருக்கு சிறை

Share
பெரம்பலுார்:பண மோசடி வழக்கில், தி.மு.க., ஒன்றிய செயலருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பெரம்பலுார் மாவட்டம், எறையூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர், 1999ம் ஆண்டு மினி லாரி வாங்க, எறையூரைச் சேர்ந்த அசோகன், 62, என்பவரை அணுகி உள்ளார். அவரும், வங்கியில் கடன் வாங்க முன்பணமாக கட்டுவதற்கு, 1.62 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார்.பணத்தை திருப்பி தராததால், 2000வது ஆண்டு ஊர் முக்கியஸ்தர்கள் முன் நடந்த பேச்சில், 'ஒரு மாதத்தில் பணத்தை அசோகன் தந்து விடுவார்' என, அவர் சார்பில் மதியழகன் என்பவர் எழுதிக் கொடுத்தார்.

பணத்தை தராததால், 2001ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ராஜமாணிக்கம் புகார் செய்தார். அசோகன், மதியழகன் மீதான வழக்கு பெரம்பலுார் நீதிமன்றத்தில் நடந்து, மாஜிஸ்திரேட் சுப்புலட்சுமி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.அசோகனுக்கு இரண்டு ஆண்டு சிறை, 20 ஆயிரம் ரூபாய் அபராதம், மதியழகனுக்கு ஓராண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகாத மதியழகனுக்கு ஜாமினில் வர முடியாத வாரன்ட் பிறப்பித்தும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மதியழகன், பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலராக உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement