dinamalar telegram
Advertisement

பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த தற்காலிக டிரைவர் பணிநீக்கம்

Share
பெரம்பலுார்:பெண் ஊழியருக்கு, 'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த தற்காலிக டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் விதவை பெண் ஒருவருக்கு தற்காலிக டிரைவராக பணிபுரியும் சந்தோஷ், 38, என்பவர், இரண்டு ஆண்டுகளாக, செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார்.அந்த பெண் ஊழியர், எஸ்.எம்.எஸ்., ஆதாரங்களுடன் கலெக்டரிடம் புகார் அளிக்க முயன்றார். டிரைவரின் ஆதரவு அதிகாரிகள் சிலர், பெண் ஊழியரை மிரட்டி, திருப்பி அனுப்பினர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் 22ல் செய்தி வெளியானது.


உடனே, பாதிக்கப்பட்ட பெண் ஊழியரை, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரி நேரில் அழைத்து விசாரித்தார். இதையடுத்து, தற்காலிக டிரைவர் சந்தோஷை நிரந்தரமாக பணிநீக்கம் செய்தும், அந்த பணியிடத்தில் நிரந்தர டிரைவர் ஒருவரை நியமித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement