dinamalar telegram
Advertisement

3வது குழந்தையும் விற்பனை: கைதான தம்பதி பற்றி திடுக்

Share
பெரம்பலுார்,:-அரியலுார் அருகே, 1.80 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்து சிக்கிய தம்பதி, மூன்றாவது பெண் குழந்தையையும் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

அரியலுார் மாவட்டம், வடவீக்கம் கிராமத்தில், மூன்று மாத பெண் குழந்தையை 1.80 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த சரவணன், 38, - மீனா, 3,5 தம்பதி உட்பட ஏழு பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்துஉள்ளனர்.கொத்தனா ரான சரவணனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது. மனைவியை பிரிந்து, ஏற்கனவே திருமணமாகி குழந்தையுள்ள மீனாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துஉள்ளனர்.


இவர்களுக்கு அடுத்தடுத்து, நான்கு பெண் குழந்தைகள் பிறந்துஉள்ளன. இதில், நான்காவதாக பிறந்த சுபஸ்ரீ என்ற மூன்று மாத குழந்தையை விற்பனை செய்து போலீசில் சிக்கினர். தொடர் விசாரணையில், சரவணன் - மீனாவின் மூன்றாவது பெண் குழந்தையான சிவானி என்பவரையும், சில ஆண்டுகளுக்கு முன் 1 லட்சம் ரூபாய்க்கு, விழுப்புரம் அருகே காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குழந்தையில்லா ஒரு தம்பதிக்கு விற்றது தெரிந்தது. இது குறித்து, தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement