dinamalar telegram
Advertisement

பாட்டி கொலை : பேரன் உட்பட 2 பேர் கைது

Share
பெரம்பலுார் : பாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த பேரன் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.


@@பெரம்பலுார் ஏ.ஆர்.சி., நகர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள், 90; இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மூன்று மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.பச்சையம்மாள் தன் இளையமகன் சங்கர் வீட்டின் முன்புற தாழ்வாரத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் பச்சையம்மாள் இறந்து கிடந்தார்.பெரம்பலுார் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், சங்கரின் மனைவி தங்கத்திற்கும், பச்சையம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கரின் மகன் கோகுல், 25; தன் நண்பர் கலையரசன், 23, என்பவருடன் சேர்ந்து, பச்சையம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், திசை திருப்புவதற்காக, பாட்டி அணிந்திருந்த வெள்ளி மோதிரம், பணம் வைத்திருந்த சுருக்கு பை ஆகியவற்றை திருடிச் சென்றதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement