dinamalar telegram
Advertisement

கார் கவிழ்ந்து விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம்

Share
ஆத்தூர்: ஆத்துார் அருகே அந்தியூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த 6 பேர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த, மதிவாணன் குடும்பத்தினர் ஆறு பேர், மேல்மலையனூர் கோவிலுக்கு, இகோ காரில் சென்றனர்.
அதே காரில், மீண்டும் திரும்பியபோது, ஆத்தூர் அருகே, ஏத்தாப்பூர், வைத்தியகவுண்டன்புதூர் பகுதியில், சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement