dinamalar telegram
Advertisement

ஆம்னி பஸ் மோதி, 70 மூட்டை அரிசியுடன், லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது

Share
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில், அரிசி ஏற்றி வந்த லாரி மீது, தனியார் ஆம்னி பேருந்து மோதியதில், 70 மூட்டை அரிசியுடன் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர், உதவியாளர் இருவர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவருக்கு சொந்தமான லாரியில் 70 அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சின்னசேலம் அடுத்த அமையாகரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜேந்திரன் 60. இன்று அதிகாலை 6.30 மணி அளவில் சேலம் நோக்கி லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.

இவரோடு அதே பகுதியைrf சேர்ந்த கனகராஜ் 40, என்பவர் உதவியாளராக கிளீனர் உடன் வந்துள்ளார். இந்த லாரி வாழப்பாடி சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் ஆம்னி பேருந்து, லாரி மீது மோதியதில், நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து 70 மூட்டை அரிசியுடன் லாரி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ராஜேந்திரன், உதவியாளர் கனகராஜ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்த 13 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement