dinamalar telegram
Advertisement

மின் கசிவில் டைலர் கடை தீப்பிடித்து எரிந்து நாசம்

Share
ஆத்தூர்: ஆத்தூர், உப்பு ஓடையை சேர்ந்தவர் ஜெயசங்கர், 48. இவர், ராணிப்பேட்டை சாலையில் டைலர் கடை வைத்துள்ளார். அதே கடையில் சுஜாதா, 43, என்பவர் பத்திரம் தட்டச்சு செய்யும் கடையும் வைத்துள்ளார். நேற்று காலை, 5:30 மணியளவில் மின் கசிவு காரணமாக டைலர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் காலை, 7:00 முதல், 9:00 மணி வரை, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில், டைலர் மற்றும் பத்திரம் எழுதும் கடைகளில் இருந்த, நான்கு தையல் இயந்திரங்கள், ஒரு கணினி, பிரின்டர், யு.பி.எஸ்., 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் என, தீயில் எரிந்து நாசமானது.* விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் சுகுமார், 23. இவர், நேற்று திருப்பூரில் இருந்து, புத்திரகவுண்டன்பாளையம், ஆத்தூர் வழியாக சென்னை நோக்கி மினி சரக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றார். நேற்று இரவு, 9:15 மணியளவில், மினி சரக்கு ஆட்டோ பழுது ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு தீயை அணைத்தனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement