dinamalar telegram
Advertisement

காதலிக்க மறுத்த பெண் வீட்டில் குண்டு வீச்சு

Share
பெரம்பலுார்:காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டின் மீது, பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


பெரம்பலுார், பாரதிதாசன் நகரைச் சேர்ந்த கணேசன் லிங்காயத் மகள் ரம்யா, 23. பெரம்பலுாரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், பெரம்பலுாரைச் சேர்ந்த நீலகண்டன் என்பவருடன் பழகி வந்தார். நீலகண்டன் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிந்ததால், அவருடன் பழகுவதை ரம்யா நிறுத்தினார்.


தன்னைக் காதலிக்கும்படி ரம்யாவை, நீலகண்டன் வற்புறுத்தி வந்துள்ளார்; அவர் சம்மதிக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், நீலகண்டனும், அவரது நண்பர் சத்தியமூர்த்தியும், ரம்யா வீட்டுக்கு சென்றனர்.வீட்டில் உள்ளவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டின் முன் பெட்ரோல் குண்டை வீசி தப்பி ஓடி விட்டனர்; இதில், அங்கு நின்ற கார், வீட்டு சுவர் சேதமானது.பெரம்பலுார் போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement