dinamalar telegram
Advertisement

நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை

Share
பெரம்பலுார்;அரியலுார் அருகே, 'நீட்' தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.அரியலுார் மாவட்டம், சாத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி, 51; மனைவி ஜெயலட்சுமி, 45. வக்கீலாக பணிபுரியும் இருவரும், குடும்பத்துடன் துவரங்குறிச்சியில் வசித்து வருகின்றனர். தம்பதிக்கு, இரண்டு மகள்கள்.இளைய மகள் கனிமொழி, 17, நாமக்கல் கிரீன் கார்டன் பள்ளியில், பிளஸ் 2 படித்து, 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றார். தஞ்சாவூரில் 12ம் தேதி, நீட் தேர்வு எழுதினார்.வீட்டிற்கு வந்து தாய் ஜெயலட்சுமியிடம், தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறி புலம்பியுள்ளார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பில் சேர முடியுமா, முடியாதா என்ற மன உளைச்சலில் இருந்துள்ளார்.கனிமொழியின் பெற்றோர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் அரியலுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தனர்.கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால், கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது, கனிமொழி துாக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து கனிமொழியை சடலமாக மீட்டனர். நீட் தேர்வு தோல்வி பயத்தால், கனிமொழி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மாணவியின் உடல், பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஏற்கனவே, அரியலுார் மாவட்டத்தில், நீட் தேர்வு தோல்வி பயத்தில் அனிதா, விக்னேஷ் ஆகியோர் தற்கொலை செய்துள்ளனர். தற்போது, மாணவி கனிமொழி தற்கொலை சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:சட்டசபையில், நீட் தேர்வுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ - மாணவியர் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடாமல், மனதை திடப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இதற்காக மாணவ - மாணவியர் மனதளவில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாணவி கனிமொழியின் பெற்றோரிடம், அமைச்சர் சிவசங்கர் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • suresh kumar - Salmiyah,குவைத்

    80,000 சீட்டுகளுக்கு 16,00,000 மாணவர்கள் போட்டியிடும்போது 15,20,000 மாணவர்களுக்கு பாஸ் மார்க் எடுத்திருந்தாலும் சீட் கிடைக்காது என்றுகூட தெரியாதவர்களா மருத்துவம் படிக்க ஆசைப் படுகிறார்கள்? தற்கொலை செய்து கொண்டவர்கள் குடும்பத்திற்கு பணம் கொடுப்பது தற்கொலைகளை ஊக்குவிப்பது போலாகும். இது தவறு.

Advertisement