dinamalar telegram
Advertisement

அனுமதியின்றி கட்டப்பட்ட தேவாலயம்

Share
கருமந்துறை:அத்திரிப்பட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தில் மத போதனை வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி துாத்துக்குடியை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு சார்பில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கீழ்நாடு ஊராட்சி அத்திரிப்பட்டி மலைக்கிராமத்தில் 2019ல் 80 சென்ட் பரப்பளவில் தேவாலயம் கட்டப்பட்டது. பாதிரியார் அன்புராஜா உள்ளிட்ட கிறிஸ்தவ மத போதகர்கள் 2019 டிசம்பரில் தேவாலயத்தை திறக்க முயன்றபோது அப்பகுதி மலைவாழ் மக்கள் ஹிந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கரியகோவில் போலீசில் புகாரளித்த பின் தேவாலயம் திறக்கப்படவில்லை. நேற்று பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா அலுவலகத்தில் ஆத்துார் ஆர்.டி.ஓ. சரண்யா தலைமையில் கிறிஸ்தவ அமைப்பினர் மலைவாழ் மக்கள் ஹிந்து முன்னணியினர் ஆகியோருடன் அமைதி பேச்சு நடந்தது.

ஆர்.டி.ஓ. கூறுகையில் 'அனுமதி பெற்றபின் தேவாலயத்தை திறக்க வேண்டும். மத வழிபாடு போதனை கூடாது. விதிமீறி திறந்து வழிபாடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். தொடர்ந்து கரியகோவில் போலீசார் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement