dinamalar telegram
Advertisement

கூட்டுறவு சங்கத்தில் ரூ.9.50 லட்சம் கையாடல் செயலர் கைது

Share
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மாதவனுார் தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.9.50 லட்சம் கையாடல் செய்ததாக சங்க செயலரை போலீசார் கைது செய்தனர்.

சங்க செயலாளராக ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 13-வது தெரு கவிநாதன் 53, இருக்கிறார். 2014 ஏப்.2 முதல் ஜூன் 30 வரை சங்க செலவு கணக்குகளில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 761 ரூபாய் கையாடல் செய்தார்.

அதே ஆண்டு ஏப்.30, அக்.4 தேதிகளில் சங்க செயலாளருக்கு கூடுதல் சம்பளம் வழங்கியதாக பொய் கணக்கு எழுதியும், உர விற்பனை தொகையை வரவு வைக்காமல் ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 829 உட்பட பல்வேறு வகையில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 887 ரூபாய் கையாடல் செய்தார்.

ராமநாதபுரம் துணை பதிவாளர் கோவிந்தராஜன் புகாரில் கவிநாதனை வணிக குற்ற புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., பாண்டிசெல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் இளவேனில் கைது செய்தார்.ராமநாதபுரம் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கவிநாதன் அருப்புக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement