dinamalar telegram
Advertisement

வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை; அதிக பனம்பழம் சாப்பிட்டதே காரணம்

Share
சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் வனச்சரகம், பச்சபாலமலை, ஊத்துமாரியம்மன் கோவில் வனப்பகுதியில், நேற்று முன்தினம் ஆண் யானை இறந்து கிடந்தது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 10 நாளாக ஆண் யானை சுற்றிக்கொண்டிருந்தது. தொடர்ந்து கண்காணித்து வந்தோம். ஆனால், 26ல் யானையை காணவில்லை. மறுநாள், வனப்பகுதியில் யானை இறந்து கிடந்தது, ரோந்து சென்றபோது தெரிந்தது. யானைக்கு, 20 முதல், 22 வயது இருக்கும். பனம்பழம் விழுந்து கிடக்கிறது. அதை, கொட்டையுடன் அதிகமாக சாப்பிட்டுள்ளது. யானைக்கு செரிமானம் ஆகாததால், தொண்டை, ஆசனவாயில் அடைப்பு ஏற்பட்டு வயிறு உப்பி இறந்துள்ளது. ஆரோக்கியமான யானை தான். திடீரென ஏற்பட்ட உணவு முறை மாற்றத்தால் இறந்து விட்டது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின், தர்மபுரி வன கால்நடை மருத்துவர் பிரகாஷ், பிரேத பரிசோதனை செய்தார். யானை உடலில் இருந்து தந்தம் எடுக்கப்பட்டது. அதே வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. தந்தம், மேட்டூர் வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement