dinamalar telegram
Advertisement

விபத்தில் உயிர் தப்பிய பெண் போலீஸ்: மாஜி எம்.எல்.ஏ., மீது வழக்கு; கார் பறிமுதல்

Share
ஆத்தூர்: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஓட்டி வந்த கார், பெண் போலீஸ் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பெண் போலீஸ் உயிர் தப்பினார். இரு பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சின்னதம்பி, 60; அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர், நேற்று மதியம், 12:10 மணிக்கு, ஆத்தூர், ரயிலடி தெரு வழியாக, 'எல்' போர்டு ஸ்டிக்கருடன் இருந்த, மாருதி 'எஸ்-பிரீசோ' காரை ஓட்டிச்சென்றார். அப்போது, 'ஆக்டிவா' மொபட்டில் எதிரே வந்த, கருமந்துறை ஸ்டேஷன் போலீஸ் பிரேமலதா, 28, மீது கார் மோதியது. அதில், மொபட் மீது கார் ஏறியபடி நின்றது. இதில், பிரேமலதா சுதாரித்து, மோதும் முன் எகிறி குதித்து, லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து, காரை நிறுத்திவிட்டு, அருகிலுள்ள ஜெராக்ஸ் கடையில், சின்னதம்பி, பாதி ஷட்டரை மூடியபடி தஞ்சமடைந்தார். ஆத்தூரை சேர்ந்த ராஜா, 50, 'நான் தான் காரை ஓட்டி வந்தேன்' என போலீசாரிடம் கூறினார். காரில் சிக்கியிருந்த மொபட்டை போலீசார் மீட்டனர். மதியம், 1:00 மணிக்கு சின்னதம்பியை, அ.தி.மு.க.,வினர் பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அதேபோல், காயமடைந்த பிரேமலதா, தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுச் சென்றார். இதுகுறித்து, ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் கூறுகையில், ''காரை, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதம்பி ஓட்டியது உறுதியானது. போக்குவரத்து பிரிவு ஏட்டு சுதாகர் அளித்த புகார்படி, சின்னதம்பி மீது, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளோம். காரை பறிமுதல் செய்து விசாரணை நடக்கிறது,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement