dinamalar telegram
Advertisement

வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு வலியுறுத்தல்

Share
சேலம்: வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் திட்டத்தை ரத்து செய்ய, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஸ்டிக்கர் தொழிற்துறை சங்கத்தலைவர் அண்ணாமலை, செயலர் லோகநாதன், போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியாவுக்கு நேற்று முன்தினம் அனுப்பிய மனு: தகுதி சான்றிதழ் பெறும் அனைத்து வாகனங்களுக்கும், 3 எம் அவேரி ஸ்டிக்கர் தான் ஒட்ட வேண்டும். அதை ஆன்லைனில் பதிவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில், 3,500க்கு விற்ற ஸ்டிக்கர்களை குறிப்பிட்ட நிறுவனங்கள், 6,000 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் அடைகின்றன. இதனால், மோட்டார் தொழிலில் ஈடுபடுவோர் மட்டுமின்றி, 'ஸ்டிக்கர்' தொழில் மேற்கொள்ளும், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அனைத்து வாகனங்களுக்கும், உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்ற போலி திட்டம், 2019 ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டது. இந்த நம்பர் பிளேட்டில் பாதுகாப்பு உபகரணங்கள், திருட்டை தடுக்கும் தொழில்நுட்பம் இல்லை. இந்த பிளேட்டை பொருத்திய பின்பே, விபத்து, வாகன திருட்டு அதிகரித்துள்ளது. அதனால், 2019க்கு முன் உள்ள பழைய முறைப்படி நம்பர் பிளேட் பொருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement