dinamalar telegram
Advertisement

விவசாயி விளைவித்த 7 அடி உயர முருங்கை; இயற்கை முறையால் மக்களிடம் வரவேற்பு அமோகம்

Share
சேலம்: இயற்கை முறையில் விவசாயி விளைவித்த, 7 அடி உயர முருங்கைக்காய்க்கு, மக்களிடம் அமோக வரவேற்பு கிட்டியுள்ளது.
நாமக்கல், திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் முத்துக்குமார், 38. இயற்கை விவசாயம் மீது நாட்டமுடைய இவர், நெல், வாழை, கொய்யா, மலர் செடிகளை இயற்கை முறையில் பயிரிட்டு விற்கிறார். இவரது விவசாயத்தை பார்க்கும் மக்கள் நேரடியாக வாங்கிச்செல்கின்றனர். இவர் தோட்டத்தில் பயிரிட்டுள்ள, 10 முருங்கை மரங்களில் விளைந்துள்ள காய்கள், குறைந்த பட்சம், 5 அடி முதல், 7 அடி உயரம் உள்ளது. நன்கு ருசியும் உள்ளதால், மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். சாதாரண முருங்கைக்காய், தற்போது மார்க்கெட்டில், 3 முதல், 5 ரூபாய்க்கு விற்கிறது. முத்துக்குமார் விளைவித்துள்ள, 4 அடி உயர முருங்கையை, 10 ரூபாய்க்கும், 5 முதல், 7 அடி உயரமுள்ள முருங்கையை, 20 முதல், 25 ரூபாய் வரை விற்கிறார். இருப்பினும், போட்டிபோட்டு மக்கள், வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். வியாபாரிகள், மொத்தமாக வாங்கி, சேலம், நாமக்கல்லில் விற்பதால், மக்கள் வியப்புடன் பார்த்து வாங்கிச்செல்கின்றனர். இதுகுறித்து, முத்துக்குமார் கூறுகையில், ''இயற்கை முறையில் மட்டும் விவசாயம் மேற்கொள்கிறேன். அதற்காக விதைகளை பல இடங்களில் தேடி கண்டுபிடித்து பயிரிடுவேன். தற்போது விளைவிக்கப்படும் முருங்கைக்காய் விதை, செடியை பொள்ளாச்சியில் வாங்கி வந்து விளைவித்துள்ளேன். இதை பார்த்த பல விவசாயிகள், இந்த முருங்கைக்காய் பயிரிட முன் வந்துள்ளது மகிழ்ச்சி,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement