dinamalar telegram
Advertisement

போதை ஆலை கண்டுபிடிப்பு: ரூ.3 லட்சம் பொருள் பறிமுதல்

Share
சேலம்: சேலத்தில், போதை வஸ்து தயாரிப்பு ஆலை கண்டுபிடிக்கப்பட்டு, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம், தாதகாப்பட்டி, சண்முகா நகர், சாமுண்டி தெருவில், போதை வஸ்து தயாரிப்பதாக, நேற்று மதியம், 2:30 மணிக்கு தகவல் கிடைத்தது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் குழுவினர் சோதனை நடத்தினர். அங்கு போதை வஸ்து தயாரிப்பதற்கான மினி ஆலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய். விசாரணையில், வாசனை புகையிலை பெயரில், 10 ஆண்டாக போதைவஸ்து தயாரித்து, மொத்தமாக விற்று வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, அதன் உரிமையாளர் பாலகார்த்திகேயனுக்கு, 33, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. கதிவரன் கூறுகையில், ''போதை வஸ்து தயாரிப்பதற்கான அடையாளங்கள் உள்ளன. கைப்பற்றிய மூலப்பொருட்களை மாதிரி எடுத்து அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்ததும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement