dinamalar telegram
Advertisement

புதுச்சேரி- கடலுார் ரயில் திட்டம்

Share
புதுச்சேரி-'புதுச்சேரி- கடலுார் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்' என புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத் தலைவர் கருப்பசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடற்கரையை ஒட்டி, கடலுாருக்கு புதிய ரயில் பாதை அமைக்க, 15 ஆண்டுகளுக்கு முன் ஆய்வுப் பணி நடந்து முடிந்தது.கடந்த 2019ல், அத்திட்டத்தை கைவிடுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. குறைந்தபட்சம் புதுச்சேரி-கடலுார் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.ஆனால், புதுச்சேரி - கடலுார் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் தற்போது இல்லை என ரயில்வே நிர்வாகம் கைவிரித்துள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கத்திற்கு இத்தகவலை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் நிறைவேறினால், பல்வேறு நகரங்களுக்கு செல்ல வாய்ப்பாக அமையும்.எனவே, புதுச்சேரி -கடலுார் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, புதுச்சேரி அரசு, கவர்னர், புதுச்சேரியை சேர்ந்த இரு எம்.பி.,க்கள் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement