dinamalar telegram
Advertisement

வடிசாராய ஆலையில் அமைச்சர் திடீர் ஆய்வு

Share
வில்லியனுார்-புதுச்சேரி வடிசாராய ஆலையில் அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு செய்து, ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையத்தில் அரசு வடிசாராய ஆலை உள்ளது. இங்கு தயாராகும் சாராயம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில்லரை வியாபாரத்திற்காக கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆலையில், அமைச்சர் நமச்சிவாயம் நேற்று ஆய்வு செய்தார். எரிசாராயம் இருப்பு வைத்துள்ள பகுதி, பாட்டில் சுத்தம் செய்யும் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். தொழிலாளர்களின் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார்.ஆலை மேலாண் இயக்குனர் (பொறுப்பு) உதயகுமார், தாசில்தார் அய்யனார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:சாராயக்கடை உரிமையாளர்கள், ஆலையில் இருந்து பெட் பாட்டில் சாராயம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் சாராய ஆலையில் ஆய்வு செய்தேன். விரைவில் கடைகளுக்கு பெட் பாட்டில் சாராயம் வழங்குவதற்கான பணி துவங்கும். தொடர்ந்து லாபகரமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement