dinamalar telegram
Advertisement

சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்க கோரிக்கை

Share
புதுச்சேரி-புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் தலைமையில் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து, கோரிக்கைகளை முன்வைத்தனர்.அதில், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பள நிலுவை, விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். நிதி ஆதாரத்தைப் பெருக்கி, மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அமைச்சர் நமச்சிவாயம் கூட்டுறவு துறை அதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பேசினார்.ஊழியர்கள், விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனே வழங்குவதற்கான கோப்புகளை தயாரிக்குமாறு உத்தரவிட்டார். ஆலையை இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement