dinamalar telegram
Advertisement

காய்கறி விதை தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கல்

Share
புதுச்சேரி-விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.வேளாண் துறை சார்பில், விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில், காய்கறி விதைகள் சிறு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துறை இயக்குனர் பாலகாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள உழவர் உதவியகத்தின் மூலம் காய்கறி விதை தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement