dinamalar telegram
Advertisement

மோட்டார் பைக் மோதியதால் தகராறு வாலிபரை சரமாரியாக வெட்டிய கும்பல்

Share
வில்லியனுார்-வில்லியனுாரில் பைக் விபத்து பிரச்னையில், வாலிபரை சரமாரியாக வெட்டி, கொல்ல முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார் மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி; பூக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஹரிபிரசாத்,28.நேற்று மாலை 4:00 மணியளவில் வில்லியனுார் தில்லை நகர் பகுதியில் ஹரிபிரசாத் பைக்கில் சென்றார்.எதிரே பைக்கில் வந்த காவேரி நகரை சேர்ந்த வினோத், பிரவீன் ஆகியோர் ஹரிபிரசாத் பைக் மீது மோதினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது அங்கிருந்தவர்கள் சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு வினோத், பிரவீன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தில்லை நகருக்கு வந்தனர். பைக்கில் வந்த ஹரிபிரசாத்தை மடக்கிய அந்த கும்பல், சரமாரியாக வெட்டியது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் திரண்டு வந்ததால், கும்பல் தப்பிச் சென்றது.ரத்த வெள்ளத்தில் மயங்கிய ஹரிபிரசாத்தை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார்.வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் சம்ப இடத்தில் விசாரணை நடத்தினர். வினோத், பிரவீன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement