dinamalar telegram
Advertisement

பசுமையான புதுச்சேரி: கவர்னர் தமிழிசை விருப்பம்

Share
புதுச்சேரி-''பசுமையான புதுச்சேரியை உருவாக்க, அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும்'' என கவர்னர் தமிழிசை கூறினார்.

புதுச்சேரியில் 75வது சுதந்திர தினத்தையொட்டி, 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக, உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம், ராஜ்நிவாசில் நேற்று நடந்தது.கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், அரசு செயலர்கள் அஷோக்குமார், வல்லவன், உதயகுமார், அருண், ரவிபிரகாஷ், ஸ்மித்தா கலந்து கொண்டனர்.கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, வேளாண் இயக்குநர் பாலகாந்தி, கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, செய்தித்துறை இயக்குநர் வினயராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கவர்னர் தமிழிசை பேசியதாவது:புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, வேளாண் செயலர் தலைமையில் 75 பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். மரக்கன்று நடுவதற்கான இடங்கள், மர வகைகள், எண்ணிக்கை ஆகியவற்றை திட்டமிட வேண்டும்.ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் வளாகங்கள், தொழிற்சாலைகள், சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும். நீண்ட நாட்கள் பலன் தரக்கூடிய பழ மரங்கள், பூச்செடிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து நட வேண்டும்.நகரப் பகுதியில் மரக்கன்றுகள் நடுவது, புதுச்சேரியை பசுமை நகரமாக மாற்றும் முயற்சியாக அமையும். முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து பசுமை புதுச்சேரியை உருவாக்க வேண்டும்.அரசுசாரா நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் இதில் ஈடுபடுத்தலாம்.சுய உதவிக் குழுக்களை மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஊக்கப்படுத்தலாம். மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக்குவதில் கவனம் செலுத்தி, அதற்கான இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement